search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி பஸ்"

    • சஞ்சனா ஒரு தனியார் பள்ளி படித்து வந்தார்.
    • பள்ளியின் பஸ் முன் பக்கம் மோதியதில் சஞ்சனா உடல் நசுங்கி சம்பவ இடத்திலே இறந்துவிட்டார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே கோமுகி டேம் காணங்காடு பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் . இவரது மனைவி மலர். இவர்களுக்கு சத்தியா (வயது 10) சஞ்சனா( வயது 4 )என்ற இரு குழந்தைகள் இருந்தனர். இருவரும் கச்சிராயப்பாளையம் மாதவச்சேரி செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளி படித்து வந்தனர்.இதில் சஞ்சனா எல்.கே.ஜி.படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றபோது பள்ளியில் பேருந்தில் இருந்து கீழே இறங்கிய போது பள்ளியின் பஸ் முன் பக்கம் மோதியதில் சஞ்சனா உடல் நசுங்கி சம்பவ இடத்திலே இறந்துவிட்டார். இது குறித்து கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து போன சஞ்சனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • ரோட்டின் நடுவே தோண்டப்பட்ட குழிகளை முறைகாக மூடாமல் அறைகுறையாக மண்ணைக்கொட்டப்பட்டுள்ளது
    • ரோட்டை பயன்படுத்தும் வாகனஓட்டிகள் தட்டுத்தடுமாறி விபத்தில் சிக்கித்தவித்து வந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது .இதன் ஒருபகுதியாக திருப்பூர் சந்தைப்பேட்டை அருகேஉள்ள காட்டுவலவு பகுதியில் பாதாள சாக்கடை கட்டும் பணி நடைபெற்றுவருகிறது .இதற்காக ரோட்டின் நடுவே தோண்டப்பட்ட குழிகளை முறைகாக மூடாமல் அறைகுறையாக மண்ணைக்கொட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மிகவும் பாதிப்படைந்துள்ளது.

    நாள்தோறும் அந்த ரோட்டை பயன்படுத்தும் வாகனஓட்டிகள் தட்டுத்தடுமாறி விபத்தில் சிக்கித்தவித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை தாராபுரத்தில் உள்ள தனியார் பள்ளியின் பஸ் ஒன்று மாணவர்களை ஏற்றிச்செல்வதற்காக திருப்பூர் காட்டுவலவு பகுதிக்கு வந்தது .அப்போது ரோட்டின் நடுவே சேறும் சகதியுமாக இருந்த ரோட்டை கடந்து செல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக பள்ளிவாகனத்தின் சக்கரம் ரோட்டில் புதையுண்டது. அதிர்ஷ்டவசமாக எவ்வித விபத்தும் ஏற்படாமல் மாணவர்கள் உயிர் தப்பினர்.

    இதுகுறித்து தகவலறிந்த தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழியில் சிக்கிய பள்ளி வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பிற்குள்ளானது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், காட்டுவலவு மெயின் ரோட்டில் ஸ்மார்ட்சிட்டி பணிக்காக தோண்டிவிட்டு அதை முறையாக மூடாமல் தொழிலாளர்கள் மெத்தனமாக விட்டுச்சென்றுள்ளனர். இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு இருசக்கர வாகன ஓட்டிகள் காயமடைந்து வீடு திரும்பும் நிலை இருந்து வருகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பழுதடைந்த நிலையில் உள்ள ரோட்டை சீரமைத்து கொடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • பள்ளிக்கு சொந்தமான பஸ்சில் இன்று காலை சேர்ந்தமங்கலம் பகுதியில் இருந்து மாணவர்கள் 4 பேரை ஏற்றி சென்றனர்.
    • சுமார் 30 நிமிடம் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. பஸ் முழுவதும் எரிந்தது.

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஜோதி நகர் பகுதியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

    இந்த பள்ளிக்கு சொந்தமான பஸ்சில் இன்று காலை சேர்ந்தமங்கலம் பகுதியில் இருந்து மாணவர்கள் 4 பேரை ஏற்றி சென்றனர். சேர்ந்தமங்கலம் ரெயில்வே கேட் அருகில் வந்தபோது பஸ்சின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    இதை கவனித்த பஸ் டிரைவர் சீனிவாசன் (வயது 31) உடனடியாக பஸ்சை நிறுத்தினார்.

    அதிலிருந்த 4 மாணவர்களை கீழே இறக்கினார். அவரும் உயிர் தப்பினார். அந்த நேரத்தில் பஸ் முழுவதும் தீ பற்றி எரிந்தது.

    இதுகுறித்து அரக்கோணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சுமார் 30 நிமிடம் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. பஸ் முழுவதும் எரிந்தது.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

    தீ விபத்துக்கான காரணம் குறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • கள்ளக்குறிச்சியில் பள்ளி பஸ்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • தீயணைப்பு நிலைய வீரர்கள் தீ விபத்தின் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் பள்ளி பஸ் ஆய்வு முகாம் நடைபெற்றது. தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமிற்கு கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பள்ளி பஸ்களை ஆய்வு செய்தார். அப்போது பள்ளி மற்றும் கல்லூரி பஸ்களில்படிகள், அவசர கால கதவு, முதலுதவி பெட்டகம், தீயணைப்புகருவி, வேக கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட 16 வகையான காரணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் பேருந்தினை இயக்கி பார்த்து ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் கூறியதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டிற்கு அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட தொடங்கியுள்ளன.

    அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமார் 490 பள்ளி பஸ்கள் உள்ளது. இதில் 326 பஸ்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 24 பஸ்கள் மறுஆய்விற்கு உட்படுத்திடமாறு பஸ்கள் திருப்பி அனுப்பப்பட்டது எனவும், மீதமுள்ள பஸ்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என கூறினார். முன்னதாக தீயணைப்பு நிலைய மாவட்ட அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீ விபத்தின் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனர். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, மாவட்ட கல்வி அலுவலர் சிவராமன், கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி, கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம், தீயணைப்பு நிலைய அலுவலர் பலகார ராமசாமி மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் உடனிருந்தனர்.

    • திட்டக்குடி அருகே சாலை ஓர பள்ளத்தில் தனியார் பள்ளி பஸ் கவிழ்ந்தது.
    • 12 மற்றும் 10 -ம் வகுப்பு பயிலும் 22 மாணவ, மாணவிகளை தினந்தோறும் ஏற்றி செல்வது வழக்கம்.

    கடலூர்:

    திட்டக்குடி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பள்ளி பேருந்து சாலையோர பள்ளத்தில் கலந்து விபத்து அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் மாணவ மாணவிகள் உயிர் தப்பினர்.கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஐவனூர் ,ஆலம்பாடி சாலையில் கழுதூரில் இயங்கி வரும் தனியார் பள்ளி பஸ் நெடுங்குளம், சிறுமுளை, பெருமுளை, புலிவலம், ஐயவனூர், ஆலம்பாடி, ஆவட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 12 மற்றும் 10 -ம் வகுப்பு பயிலும் 22 மாணவ, மாணவிகளை தினந்தோறும் ஏற்றி செல்வது வழக்கம். இன்று காலை வழக்கம்போல் பெருமுளை கிராமத்தை சேர்ந்த ராமசந்திரன் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றி கொண்டு பஸ் ஓட்டி வந்தார். கனகம்பாடி கிராமம் அருகே பஸ் அதிவேகமாக சென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்தானது. இதனால் மாணவ- மாணவிகள் அலறினர். சத்தம் கேட்டு பொது மக்கள் ஓடிவந்தனர். விபத்தில் சிக்கிய மாணவ மாணவிகளை மீட்டனர். இந்த விபத்தல் சிறு காயங்களுடன் அதிஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர் . தகவலறிந்து வந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மீட்டு வீட்டுக்கு அழைத்துச் சென்றனர் .இது குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 8 தாலுகாவில் 1,300 பள்ளி பஸ் இயங்குகிறது.
    • விரைவில் கூட்டாய்வு கூட்டம் நடக்குமென வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பூர் :

    பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய ஆண்டின் இருமுறை பள்ளி பஸ்களின் நிலை குறித்து ஆராய்ந்து சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. நடப்பு கல்வியாண்டு பள்ளிகள் தொடங்கிய நிலையில் தனியார் பள்ளிகளில் பஸ்கள் இயக்கம் பல பகுதிகளுக்கு துவங்கியுள்ளது.இந்நிலையில் பள்ளி பஸ்கள் எந்த நிலையில் உள்ளது. முன்பக்க, பின்பக்க, அவசர கதவுகள் நிலை, இருக்கை முதலுதவி வசதி, படிக்கட்டுகளின் உயரம், வேக கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்டவை குறித்து திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு வட்டார போக்குவரத்து துறை சார்பில் வரும் 25-ந்தேதி திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் ஆய்வு நடத்தப்படுகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாவில் 1,300 பள்ளி பஸ் இயங்குகிறது. இவற்றில் வடக்கு, தெற்கு ஆர்.டி.ஓ., எல்லைக்கு உட்பட்ட பஸ்கள் மட்டும் 25 -ந்தேதி ஆய்வு செய்யப்படுகிறது. அடுத்த வாரத்தில் தாலுகா அளவில் பள்ளி பஸ் ஆய்வு நடக்கவுள்ளது. ஆய்வு விபரங்கள் ஜூலை முதல் வாரத்தில் மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கையாக சமர்பிக்கப்பட உள்ளது.

    பள்ளி பஸ் ஆய்வுக்கு முன்னதாக பள்ளிகல்வித்துறை, வட்டார போக்குவரத்து துறை, போலீசார், பள்ளி நிர்வாகங்கள் இணைந்த ஆய்வு கூட்டம் நடத்தப்படும். இதில், பள்ளி பஸ்கள் எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து பள்ளி தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு விளக்கப்படும். நடப்பு கல்வியாண்டு துவங்கியுள்ள நிலையில், விரைவில் கூட்டாய்வு கூட்டம் நடக்குமென வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×